இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் டிரெய்லர்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

0
166
#image_title

இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் டிரெய்லர்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(அக்டோபர் 5) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புதிய போஸ்டர். இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று(அக்டோபர்5) டிரெய்லர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் முழுவதும் லியோ டிரெய்லர் என்ற வார்த்தையை தான் அதிகமாக பார்க்க முடிந்தது. நேற்றும்(அக்டோபர்4) இன்றும்(அக்டோபர்5) சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் மற்றும் லியோ திரைப்படத்தின் புகைப்படங்கள் தான் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது.

ரசிகர்கள் அனைவரும் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் டிரெய்லர் ரிலீஸ் டைம் எப்பொழுது என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் “நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கின்றது. சமையல் முடிந்தது. விரைவில் பறிமாறிவிடுவோம்” என்று டேவிட் செய்திருந்தது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெறித்தனமான ஒரு போஸ்டர் பகிர்ந்து டிரெய்லர் வெளியீட்டு நேரத்தை அறிவித்துள்ளது.

அதன்படி லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(அக்டோபர்5) மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று வெளியாகும் டிரெய்லரை பார்த்தால் நீண்டநாட்களாக இருக்கும் எல்.சி.யு சந்தேகமும் குழப்பமும் தீரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleஎஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!
Next articleஎன்ன பொசுக்குனு கெட்டவார்த்த பேசிட்டிங்க தளபதி!!! டிரெய்லர் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!