News

ராஜஸ்தான் || அதிகாலையில் தடம் புரண்ட ரயில்.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..!

ரயில் பெட்டிகள் தடம் புரண்டால் பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் இருந்து டெர்மினல் ஜோத்பூர் சூரியன் அக்ரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் ராஜ்கியாவஸ் போமத்ரா சென்று கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டந்தது. இதில், ரயிலின் 11 பெட்டிகள் சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ்கள் மூலம் வரவைத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் தடம் புரண்ட விபத்தில், 11 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளதாகவும் காயமடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காயமடைந்து பயணிகளின் குடும்பத்திற்கு அவர்களின் நிலை குறித்து அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment