நாளை வரை ரயில்கள்  இயங்க  தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Amutha

நாளை வரை ரயில்கள்  இயங்க  தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

 

ராமேஸ்வரத்திற்கு நாளையும் ரெயில்கள் செல்ல இரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒரு விரிகுடா மீது கட்டப்பட்ட 2.2 கி.மீ நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கிறது.இது இந்தியாவில் உள்ள இரண்டாவது மிக நீளமான கடற்பாலமாகும்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தின் அருகே அமைந்துள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ள இரயில் பாலத்தில் அமைந்துள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூணில் விரிசல் ஏற்பட்டதும் சென்சார் கருவியில் ஒலிஎழுப்பி எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து பாம்பன் பாலத்தில் சீரமைக்கும் பணி கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி தொடங்கி நடைபெறத் துவங்கி செயல்பட்டு வருகின்றது. இதனால் பாம்பன் பாலத்தை கடந்து ரயில்கள் செல்ல இரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. மேலும் விரிசல் ஏற்பட்டு 3-ஆம் நாளான நேற்று விரிசல் ஏற்பட்ட தூக்கு பாலத்தில் உள்ள தூணில் பழுது நீக்கிட மரப்பலகையில் சாரம் அமைத்தனர்.

இன்று டிசம்பர்- 26 முதல் விரிசல் ஏற்பட்ட தூணில் இரும்பு பிளேட் பொருத்தும் பணி நடைபெற இருக்கிறது. அதனால் நாளை டிசம்பர்-27 வரை  பாம்பன் பாலத்தின் வழியே இராமேஸ்வரத்திற்கு இரயில்கள் செல்ல இரயில்வே நிர்வாகம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.baa