ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
நேற்று முன்தினம் சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில இணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் இணைச் செயலாளர் ரியாஸ் போன்றவர்கள் முன்னுரை வகுத்தனர். மேலும் தென்மண்டல துணைத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
மேலும் அந்த உண்ணாவிரத போராட்டத்தின் முக்கிய காரணமானது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும் வார ஓய்வு 40 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் எனவும் பெண் டிரைவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ரயிலில் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பெண்களுக்கு பேறுகால அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் எனவும் ரயிலில் பழுது நீக்கும் உபகரணங்களை ரயில் ஓட்டுநர்களை சுமக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது என துணைத்தலைவர் அருண் மற்றும் ராமசாமி ,பரமசிவம்,பிரகாஷ் மற்றும் ரயில் ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இவர்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் எனவும் பலரும் ரயில்வே துறையினரை கேட்டு வருகின்றனர்.