சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Photo of author

By Amutha

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது.

அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட நெரிச்சலில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அவதிக்கு உள்ளாகின்றன. 

21 பெட்டிகளை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் 4 பொதுப்பெட்டிகளை கொண்டிருந்தது.தற்போது 4 பெட்டியில் இருந்து 3 பெட்டியாக குறைத்து, 1பெட்டியை ஏ.சி.பெட்டி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது.இதனால் பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் இடம் இல்லாமல் நெரிச்சலில் ஈடுபடுகின்றன.

இதன் காரணத்துடன் பயணிகளின் கோரிக்கை பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும்  அதிகப்படுத்த வேண்டும் என்பதே.இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே பொறுப்பு ஏற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 20,21 ஆம் தேதி முத்து நகர் ரயிலின் பொதுப்பெட்டிகளை  அதிகரிக்கும் என்பதை தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி முத்துநகர் ரயில் பொது பெட்டியில் பயணிக்கும் பயணிகள் பெட்டிகள் அதிகரிப்பின் காரணமாக மகிழ்ச்சியாக உள்ளது என கூறுகின்றன.அதேப்போல்  ஏற்கனவே கோரிக்கை அளிக்கப்பட பாலக்காடு, நெல்லை பாலருவி ரயிலை துத்துக்குடி வரை இயக்குமாறு  பயணிகள் மத்தியில் கோரிக்கை நெறிமுறை படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது .