ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

0
214
Train service canceled for these areas till January 10! The information released by the railway administration!
Train service canceled for these areas till January 10! The information released by the railway administration!

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலினால் பள்ளி மற்றும் கல்லூரி அனைத்தும் மூடபட்டிருந்தது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது.ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் கடந்த சில மாதங்கள் வரை கட்டாயம் முககவசம் அணியவேண்டும் ,சமூக இடைவெளி,கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தது.

கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தபட்டது.இந்நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப்7 வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது.

மேலும் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்ககளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது,கடந்த மாதம் திபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டது.

கடந்த 23 ஆம் தேதி பாம்பன் பாலத்தில் வழக்கமான அளவை விட அதிகமான அதிர்வுகள் ஏற்பட்டது.அதனால் தற்போது பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது.அதன் காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ஜனவரி பத்தாம் தேதி வரை நிறுத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் செல்ல வருகிற 31 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுள்ளது.

Previous articleகுழந்தையை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும்! அரசு வெளியிட்ட தகவல்?
Next articleடிகிரி முடித்திருந்தால் போதும்…SIDBI வங்கியில் பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம் !