செங்கல்பட்டிலிருந்து ரயில்கள் இயக்கம் – தேதி அறிவிப்பு

Photo of author

By Parthipan K

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு செல்லும் வகையில் ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 20 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 1ம் தேதியிலிருந்து 100 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்திலிருப்பதால் ரயில் போக்குவரத்து தற்போதைக்கு வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கோட்டு கொண்டதால் தமிழகத்திற்கான ரயில்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமில்லாத தமிழக நகரத்தினிடையே ரயில் போக்குவரத்தை துவங்க தமிழகத்தின் சார்பில் தென்னக ரயில்வேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து இதற்கு அனுமதியளித்த தென்னக ரயில்வே கடந்த ஜூன் 1ம் தேதி முதல் கீழ்கண்ட ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது .

இதனை தொடர்ந்து திருச்சி – செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாக ரயில், அரக்கோணம் – கோவை இடையே காட்பாடி, சேலம் வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்கவும், தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று திருச்சி – செங்கல்பட்டு வழித்தடத்தில் இரண்டு ரயில்களும், அரக்கோணம் – கோவை வழித்தடத்தில் ஒரு ரயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஜூன் 12ம் தேதி முதல் துவங்கும் என தெரிகிறது.