2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…
2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை-எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பயண நேரம் 45 நிமிடங்கள் குறைக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்பொழுது இரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் இருப்புப்பாதை அமைப்பது, இரயில் பாதைகளின் தரத்தை மேம்படுத்துவது போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் தெற்கு இரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் இரயில்கள் வேகத்தை 130 கி.மீ வேகம் வரை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் கூடுர் வரையிலும், சென்ன சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையிலும், ஜோலார்பேட்டை வழித்தடத்திலும் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதைப் போலவே தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில்களின் இருப்புப்பாதையின் தரத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் “முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளோம். அந்த சேவைக்காக இரயில்களின் பாதைகளின் தரத்தை மேம்படுத்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையில்லாமல் இருக்கும் நுழைவுகளை நீக்குவது ஆகிய பணிகள் நடந்து வருகின்றது.
சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு – விழுப்புரம் வழித்தடத்தில் தற்பொழுது மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இனி அந்த வழித்தடத்தில் இரயில்களை மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு(2024) மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும். இரயில்கள் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் பொழுது பயண நேரம் 45 நிமடம் வரை குறைய வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.