நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாக பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. தன்னுடைய வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்வதற்காகவே புது புது அறிவிப்புகளையும், சலுகைகளையும், அந்த வங்கி வழங்கி வருகிறது.
இந்த வங்கி தற்போது தன்னுடைய அனைத்து சேவைகளையும் மக்களின் வசதிக்காக டிஜிட்டல் முறையில் மாற்றி இருக்கிறது. குறிப்பாக கடந்த 2020 ஆம் வருடம் நிலவரப்படி 85 மில்லியன் இணைய வங்கி மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் யூஸர்களை கொண்டிருக்கிறது.
அதோடு தற்போது வங்கியில் டிஜிட்டல் தளமான YOYOவில் 35 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் இருக்கிறார்கள். அதோடு இந்த வங்கி நாடு முழுவதும் 22000 கிளைகள் மற்றும் 57,889க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை கொண்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.
இவ்வாறு பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தி இருக்கின்ற இந்த வங்கி சென்ற வருடம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
அதனடிப்படையில் எஸ்பிஐ சேமிப்பு கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மணி கணக்கில் வங்கிகளில் காத்திருக்காமல் சுலபமான முறையில் வீட்டிலிருந்த படியே SBI YONO மற்றும் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக மாற்றிக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது இதனை எப்படி மாற்றுவது என்பது தொடர்பாக இங்கே விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
YONO SBI யை பயன்படுத்தி வங்கிக் கிளையை மாற்றம் செய்யும் முறை
உங்களுடைய கைபேசியில் YONO SBI யை லாகின் செய்யவும், இதனைத் தொடர்ந்து service என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதன் பிறகு சேமிப்பு கணக்கை மாற்றுதல் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பின் உங்களுடைய கணக்கை மாற்ற விரும்பும் வங்கிக் கிளையின் புதிய குறியீட்டை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் Get Pranch என்ற பெயரை கிளிக் செய்தால் புதிய கிளையின் பெயரை காண இயலும்.
இதுபோன்று நீங்கள் செய்து முடித்தவுடன் உங்களுடைய கணக்கை மாற்றுகிறிர்களா? என்று கேட்கும் அப்போது மொபைல் எண்ணுக்கு வரும் ஓ டி பி யை டைப் செய்து சம்மீட் பட்டனை கிளிக் செய்தால் போதும் உங்களுடைய சேமிப்பு கணக்கு மாற்றப்படும்.