இதுதான் தன்னாட்சியை கட்டிக் காக்கும் லட்சணமா முதலமைச்சரே? முதல்வரை கேள்வி எழுப்பிய சீமான்!

Photo of author

By Sakthi

கோவை கார் வெடி விபத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமியிடம் தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டது தவறான முடிவு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை உக்கடம் வருகை வாகனத்தில் எரிக்காற்று உருளை வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானது குறித்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படை திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிக தவறான நிர்வாகம் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை பாஜகவின் கிளை பிரிவை போல செயல்பட்டு இஸ்லாமிய மக்களை குறிவைத்து வேட்டையாடுவதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாநில தன்னாட்சியின முழங்கும் திமுக அரசு தேசிய புலனாய்வு முகமையின் கையில் இந்த வழக்கை ஒப்படை த்திருப்பது ஏற்புடையதாக இல்லை. வன்முறை செயலில் ஈடுபட்டு சமூக அமைதியை குறைக்க முயற்சி செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களை சாதி ,மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியிருக்கிறார் சீமான்.

அதேநேரம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அந்த சமூகத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் ஓகே என்பது மிகவும் ஆபத்தானது விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணை நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே இந்த கோர விபத்து நிகழ்வுக்கு மதச்சாயம் பூசுவது அப்பட்டமான மத காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார் அதோடு அந்த விபத்து நடந்த உடன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து சரியான ஒத்துழைப்பு வழங்கி வரும் இஸ்லாமிய மக்களை குற்றம் சுமத்தும் நோக்கத்தோடு மதவாதிகளால் செய்யப்படும் கருத்துருவாக்களும், கட்டமைப்புகளும் கடுமையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் விசாரணை நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே இந்த வழக்கை அவசர அவசரமாக தேசிய புலனாய்வு முகம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? இந்த வழக்கில் அயல்நாட்டு தொடர்பு இருக்கும் வாய்ப்புள்ளதாக காரணம் கற்பிக்கும் திமுக அரசு விசாரணை இறுதி கட்டத்தை எட்டுவதற்கு முன்னரே இது போன்ற முன் நடவடிக்கைக்கு எதன் அடிப்படையில் ஆயத்தமானது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

எந்த வழக்காக இருந்தாலும் துப்பறிந்து விசாரணை மேற்கொள்வதில் திறமையான தமிழக காவல்துறையிடம் உள்ள வழக்கை தேசிய புலனாய்வு முகைமையிடம் ஒப்படைப்பதன் மூலமாக தன்னுடைய இயலாமையை ஏற்றுக் கொள்கிறாரா முதலமைச்சர்? அல்லது காவல்துறையின் மீது நம்பிக்கையை இழந்து விட்டாரா முதல்வர்? எதற்காக இப்படியான முடிவு பாஜகவின் கூற்றை ஏற்றுக்கொண்டு தான் இந்த வழக்கை கைமாற்றி விடுகிறதா? மாநில அரசு

தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வருகின்ற நிலையில், கட்டற்ற அதிகாரத்தை கொண்டிருக்கும் தேசிய புலனாய்வு முகமையை இது போன்ற வழக்குகளில் நுழைய வழிவகை செய்வது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்டோன் சுவாமி வர வர ராவ் ஆனந்த் வெல் டும் டே போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் பீமா கொரேகான் வழக்கில் தேசிய பிறனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளது போல இந்த வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களும் கைது செய்யப்படலாம் அப்படி கைது செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பி உள்ளார் சீமான்.

தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காக தேசிய திறனாய்வு முகம் மிக்க அனுமதி வழங்கி விடுவது தான் மாநில தன்னாட்சியை கட்டுக்கட்கிற லட்சணமா முதலமைச்சரே? வெட்கக்கேடு, ஆகவே இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி அந்த கோர நிகழ்வின் பின்புலத்தில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவந்து குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை கடுமையான சட்ட நடவடிக்கை உட்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்ற அதே நேரத்தில், தாரை வார்த்து இருப்பதற்கு என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

. இதோடு இந்த கொடுமை நிகழ்வை அடிப்படையாக வைத்து மதப் பூசலுக்கு வித்திட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்யும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க சனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என்று வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்திருக்கிறார்.