வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை

0
132
Director Mohan G
Director Mohan G

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை

சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ‘ஹெல்மெட் ’அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.1,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு புரிய வைக்க பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையானது பல மடங்குஉயர்த்தப்பட்டது. இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில் புதிய நடைமுறையின்படி ‘ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களுக்கு அபராத தொகையானது ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் செல்போன் பேசிக்கொண்டே  வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு அபராதமாக ரூ.1,000, காரில் ‘சீட்’ பெல்ட் அணியாமல் சென்றால் அபராதமாக ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், ‘லைசென்சு’ இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5 ஆயிரமாகவும் அபராத தொகையானது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் (நோ பார்க்கிங்) ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், தடை செய்யப்பட்ட சாலையில் (நோ என்ட்ரி) வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராத தொகையானது ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்வோர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் திரௌபதி பட இயக்குனர் மோகன் மேலும் சிலரை குறிப்பிட்டு இவர்களுக்கும் அபராத தொகையை உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் #புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு #coollip மற்றும் #குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு M. K. Stalin சார் அவர்களை கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.