உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

Photo of author

By Hasini

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் முதன் முதலில் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவிக் கொண்டே இருக்கிறது. அதற்கு மருந்து இல்லை என்பது போல, அது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் விடாமல் துரத்துகிறது. மேலும் இது பல வகைகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வைரஸ் ஆக உள்ளது. முதலில் கொரோனா ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் அதன் உருவங்களை உருமாற்றி மனிதர்களிடையே பரவி வருகின்றது.

அதைப்போலவே தற்போது அதன் உருமாறிய ஒரு வடிவமாக பி.1.621 பரவி வருகிறது. இதை மு என்றும் அழைக்கின்றனர். இது கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. அதன்பின் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் அதிக அளவில் காணப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு நிறுவனம் கூறியுள்ளது. இது உலகளாவிய பாதிப்பை கொண்டிருந்தாலும் தற்போது வரை இதன் பரவல் 0.1 ஒன்று என்ற சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில் கொலம்பியாவில் 39 சதவிகிதமும், ஈக்வடாரில் 13 சதவிகிதமும் உள்ளது. மேலும் இது  தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த  உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. இதுவரை முப்பத்தி ஒன்பது நாடுகளில் இந்த வைரஸ் காணப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் சாத்தியங்கள் ஆன பண்புகளை கொண்டுள்ளதாகவும், தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டதாகவும், இருக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படும் ஐந்தாவது உருமாறிய வைரசும் ஆகும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த உருமாறிய வைரஸானது தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டதாக இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் இதை உறுதி செய்ய இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.