இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி!
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வடகிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்த காற்றழுத்தம் புயலாக மாறியதால் அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இவை புதுச்சேரி-ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் கரையை கடந்தது.
அதனால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.
மேலும் நேற்று மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட சிறப்பு பாதைகள் சேதம் அடைந்தது.அதனை தொடர்ந்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் அனைத்தும் சேதமடைந்தது.
அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் ஒலி பெருக்கியின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் கடல் அதிகளவில் சீற்றத்துடன் காணப்படுகின்றது.அதனால் எண்ணூர் விரைவு சாலையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிப்படைந்தது.மேலும் எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் தேவாலயம் எதிரில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீரினால் கற்கள் சாலை விழுந்துள்ளது அதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் எண்ணூர் விரைவு சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் மெதுவாக உயிருக்கு ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.