அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

Photo of author

By Sakthi

போக்குவரத்து துறையிலே, சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில், பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திடவேண்டும் என முதல்வருக்கு டி.டி .வி.தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய வலைபதிவில் போக்குவரத்து துறையில் சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணிஓய்வு அடைந்தவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற இருந்தவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையிலே, டிசம்பர் மாதம் 2019ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பலன்களை கொடுத்து விட்டு இடைப்பட்ட நான்கு மாதங்களில் ஓய்வு அடைந்தவர்களை காத்திருக்க வைப்பது சரியானது கிடையாது. ஆகவே இதற்கான அரசாணையை உடனடியாக அரசு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.