இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!

0
74

நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலை கடைகள் முன்பாக, அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக திமுக சார்பாக முறையிடப்பட்டிருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இதற்கிடையே பொங்கல் பரிசாக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுகவின் தலைவர்களுடைய புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகை டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களும், தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெறக்கூடாது என்று நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் நேற்று பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி இதனை மீறி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் நியாயவிலைக் கடைகள் முன்பும் உள்ளேயும் பேனர்கள் ,மற்றும் சுவரொட்டிகள், வைத்து ஆளும் கட்சியினர் இடையூ,று ஏற்படுத்துகிறார்கள் என்று முறையிட்டு இருக்கின்றார்.

இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், வலியுறுத்தி இருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கு தொடர்பாக அரசு தரப்பிற்கு அறிவிக்கை கொடுத்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கொடுத்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலைக்குள் வழக்கு போடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்ற வழக்கறிஞர் வில்சன், வழக்கு சம்பந்தமான நகலை அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கொடுப்பார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.