தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்! அவதியில் மக்கள்!

Photo of author

By Sakthi

ஊதிய உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசின் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் சார்பாக நடத்தப்படும் இந்த போராட்டமானது மூன்றாவது தினமாக தொடர்ந்து வருகிறது.

போராட்டம் தொடர்ந்தாலும் கூட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் அல்லது அதிகாரிகளோ எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

வேலை நிறுத்தம் காரணமாக, தமிழக மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே பல மாவட்டங்களில் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களை தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.