தேர்வின்றி தேர்ச்சி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

0
95

கொரோனா காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பள்ளியில் எதுவும் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அண்மையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்கள் இணையவழி மூலமாகவே வகுப்பில் பங்கேற்று வந்தார்கள். அவர்கள் இணையதளம் மூலமாக சரியாக கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, அவர்களுக்கான பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஒன்பது, பத்து மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழகத்தில் 25- 3 – 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2020 21 ஆம் கல்வி ஆண்டில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு நோய்தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து சென்ற ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வியை கற்று வந்தார்கள். மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி இணையதளம் போன்றவையும் மூலமாகவே கல்வியை கற்று வந்தார்கள். ஆகவே அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் வைத்து பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கல்வி வருடத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த பல இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் வைத்தும், பெற்றோர்களின் கோரிக்கையை கருத்தில் வைத்தும், பல்வேறு கருத்துக்களை பரிசீலனை செய்து 2020 21 ஆம் கல்வி வருடத்தில் 9 10 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் எல்லோரும் முழு ஆண்டு தேர்வுகள் சந்திக்காமல் நேரடியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.