சிக்கிக்கொண்ட திருச்சி சிவா!சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

0
223

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களுக்கு மக்களவையில் பெரும் பெரும் எதிர்ப்பு  இருந்தபோதிலும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையில் மைய மண்டபத்திற்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் .

மேலும் அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தையும் கிழித்து எரியத் தொடங்கினார். மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, திரிணாமுல் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேசி வேணுகோபால் ஆகியோர் இந்த மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிய தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. 

மேலும் சில எம்பிகள் சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதேசமயம், மாநிலங்களவையில் துணை சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமளியில் ஈடுபட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது “உரிமை மீறல் தீர்மானம்” கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ராஜ்யசபா விதி 256 இன் கீழ் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானமொன்றை நாளை தாக்கல் செய்ய உள்ளார். இதில் திருச்சி சிவா மற்றும் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் உள்ளனர் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு இதைப்பற்றி முடிவெடுக்க உள்ளார்.இந்தக் இந்த விவகாரம் தொடர்பான முடிவெடுக்கும் முழு உரிமையும் வெங்கையா நாயுடு க்கு உண்டு என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Previous article10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வு.. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; இதுவரை 87,882 பேர் உயிரிழப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here