அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

0
196

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து அஜித் திரௌபதி படத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா எனும் சர்ச்சை எழுந்துள்ளது.

திரௌபதி எனும் படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. அதன் டிரைலர் எதிர்பார்த்தை விட அதிக பார்வையாளர்களை சென்று சேர்ந்தது. வட தமிழக மாவட்டங்களில் நடக்கும் இரு வேறு சாதிகளுக்கு இடையில் நடக்கும் காதல்களால் உருவாகும் பிரச்சனைகளை (நாடக காதல் என படத்தில் சொல்லப்பட்டுள்ளது) மையப்படுத்தி உருவாக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

இதனால் இந்த படத்தை ஒரு சாதியினருக்கு எதிரானப் படம் என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் உண்மையை எடுத்து சொல்லும் படம் எனவும் இருவேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த படத்தில் அஜீத்தின் மைத்துனர் மற்றும் ஷீலா ராஜகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் மைத்துனர் நடித்திருப்பதால் அவரிடம் படத்தை காட்டி ஆதரவு பெற்றதாக ஒரு கருத்து நேற்றுமுதல் பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்துவது போல அஜித்துடன் இயக்குனர் மோகன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் ட்விட்டரில் வெளியாகி பரபரப்பானது.

ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என  திரௌபதி படத்தின் இயக்குனரே விளக்கியுள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ’வதந்திகளைப் பரப்பாதீர்கள்… தல திரௌபதி திரைப்படத்திற்கு எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் உலாவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ரசிகராக நான் அவருடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் மட்டுமே’ என விளக்கம் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Previous articleபெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் !
Next articleகன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!