இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!
இக்காலகட்டம் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை சேர்ந்த ஓர் இளைஞர் குறைந்த செலவில் பேட்டரி மிதிவண்டி கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்து உள்ள கிராமம் தான் வைத்திய கவுண்டன் புதூர். இந்த கிராமத்தில் சுரேஷ் என்ற இளைஞர் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றுள்ளார்.சேலத்தில் உள்ள நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஓர் மின்கலன் மிதிவண்டியை உருவாக்க வேண்டுமென்று பலமுறை எண்ணி வந்துள்ளார்.இதன் முதல் படியாக இவரது பழைய மிதிவண்டியில் பேட்டரி மின்கலனை பொருத்தியுள்ளார். அடுத்தடுத்தாக இவருக்கு ஏற்றவாறு பல பொருட்களை தனித்தனியாக வாங்கி தினமும் இதற்கென்று ஒரு அரை மணி நேரம் செலவிட்டு மிதிவண்டியை தயாரித்து வந்துள்ளார்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கியதுதான் இந்த பேட்டரி மிதிவண்டி என்று கூறியுள்ளார்.
மின்கலன் பேட்டரிபொருத்தப்பட்ட இந்த மிதிவண்டியை தினந்தோறும் அவர் பயன்படுத்தி வருகிறார்.மேலும் அந்த இளைஞர் கூறியது, பெட்ரோல் டீசல் விலை ஏறிவரும் நிலையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழியிலும், நான் இந்த மின்கலன் பொருத்தப்பட்ட பேட்டரி சைக்கிளை உருவாக்கியுள்ளேன். இது மற்றவருக்கும் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இருப்பதே என் தலையாய நோக்கம். என் மிதிவண்டியை பார்த்து பலரும் இவற்றை போல் செய்து கொடுக்க கேட்கின்றனர். நான் ஆடை வடிவமைப்பு பட்டம் முடித்து தற்போது நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.
இச்சமயத்தில் நான் என் பழைய மிதிவண்டி வைத்து இந்த பேட்டரி மின்கலன் மூலம் இயங்கும் சைக்கிளை உருவாக்கினேன். இதனை உருவாக்க பல பயிற்சி வீடியோக்களை பார்த்து கற்றுக் கொண்டேன். இந்த பேட்டரி மின்கலன் மிதிவண்டி உருவாக்க வெறும் ரூ 9,000 மட்டுமே செலவானது. வேண்டுமென்றால் நாளடைவில் மின்சாரத்தில் இயங்கும் படியாக மிதிவண்டியை மாற்றிக்கொள்ளலாம். எரி பொருளை வைத்து இயங்கும் மோட்டார் சைக்கிள்களை அகற்றிவிட்டு இதுபோல பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். நான் இரண்டு மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செல்ல முடியும் என்று கூறியுள்ளார். இவரது கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.