பின்னணி எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் தீவிர அளிக்க அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
கொரோனா பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. எஸ் பி பி யின் உடலில் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் இப்போதைய நிலையில் வெற்றிகரமாக உள்ளன மருத்துவ வல்லுநர் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக நுரையீரல் பாதிப்பு தீவிரமடையும் பொழுது இதயத்திற்கு ரத்தத்தை உந்தி தரும் தரும் பணிகள் தடைபட கூடும். அதன் காரணமாக உடலுக்கு வெளியே எக்மோ கருவிகள் பொருத்தப்படுவது வழக்கம். ஏறக்குறைய செயற்கை நுரையீரலை போல அந்த கருவி செயல்பட்டு இதயத்திற்கு தேவையான இரத்தத்தை செலுத்தும்.
நோய்த் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டும் எக்மோர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம் என்றாலும் அது போன்ற சிகிச்சைகள் மூலம் பலர் பூரணமாக குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அவர்களைப் போலவே பாடகர் எஸ்.பி.பி-உம் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று திரையுலகமும் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.