டிடிவி-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சொந்த சமூக தலைவர்கள்.

Photo of author

By Sakthi

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் அண்மையில் ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதற்காக டாக்டர் சேதுராமன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் இசைக்கிமுத்துவின் பசும்பொன் மக்கள் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளிலும் சார்பாகவும், நிறுவனத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தனித்தனியே வாழ்த்து மடல் அனுப்பி வைக்கப்பட்டியிருகின்றன.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு முக்குலத்தோர் சமுதாய கட்சிகள் அனைத்தும் சசிகலாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்று கணக்கு போட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பு இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது. சமுதாய மக்களும் சரி, இந்த சமுதாயத்தின் தலைவர்களும் சரி யாருமே சசிகலாவை சந்திக்க வராத காரணத்தால், டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அவருடைய ஆதரவாளர்கள் முதலில் உங்கள் உறவினர்களை ஒன்றிணையுங்கள் அடுத்ததாக சமுதாயத்தை எதிர் பாருங்கள் என்று நக்கல் செய்து சிரித்திருக்கின்றார்கள்.

உடன் பிறந்த சகோதரர் சுதாகரனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர மனமில்லாத இவர்களுடன் நாம் சென்றால் நம்முடைய நிலை என்னாகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் அவர்கள் சார்ந்த சமூகத்தை சார்ந்த சாதி கட்சி தலைவர்கள். அதிமுகவின் அமைச்சர்கள் இடையே சுதாகரனை நிராகரித்தது தூக்கத்திலும் கூட ஞாபகம் வருவதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.