திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Photo of author

By Parthipan K

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை நிலைநாட்டினார் திரவுபதி முர்மு.

வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, யஸ்வந்த் சின்ஹா, முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மம்தா பேனர்ஜி ஆகியோர் திரவுபதி முர்மு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, இரண்டாவது பெண் ஜனாதிபதி மற்றும் மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெற்று பாராட்டபட்டு வருகிறார். மேலும் வெற்றி பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முன் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கவுகாந்தி, ஹைதராபாத், மராட்டியம், ஸ்ரீநகர்,ராஜி, பாட்னா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்தும் பழங்குடியின மக்கள் இசை முழங்க நடனம்  ஆடியும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பை பகிர்ந்தும் தங்களது வெற்றியை கொண்டாடினார்கள்.

அதேபோல் தமிழகத்தில் நீலகிரி வனவாசி கேந்திரத்தைச் சேர்ந்த கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து அக்கால பாரம்பரிய இசை முழங்க ஊர்வலமாக சென்று நேர்முக வளாகத்திலுள்ள தங்கள் குலதெய்வ கோவிலான ஐயனார் கோவில் வழிபாடு நடத்தினார்கள்.

பின்னர்  காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக வெற்றி கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர். மேலும் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை பழங்குடியின மக்கள்  ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தினமாக கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சிகளை காண பல்லாரக் கணக்கான மக்கள் அங்கு கூடபோவதாக தெரியவருகிறது.