DIG Varun Kumar: சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன் திருச்சி டிஐஜி வருண் குமார் தெரிவித்து இருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தின் முன்னாள் எஸ்.பி.,யாக இருந்தவர் வருண் குமார். நாம் தமிழர் கட்சியினர் தன்னையும் தன் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
வருண் குமார் கொடுத்த மனுவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இருக்கும் சீமான் தன்னையும் தன் குடும்பத்தினரையும் பல மேடைகளில் பொது கூட்டங்களில் மற்றும் சமூக வலைதளத்தில் அவதூறு பேசி தனிப்பட்ட விதமாக மிரட்டல் விடுத்தது இருந்ததாக தெரிவித்து இருந்தார்.மேலும், சீமானின இச்செயலுக்கு நஷ்ட ஈடாக இரண்டு கோடி வழங்க வேண்டும்.
இல்லை என்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், சமீபத்தில் இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாநாட்டில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட வருண் குமார் நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டிய அமைப்பு எனப் பேசிய இருப்பது இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், வருண குமார் திருச்சி மாவட்டத்தின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர். தன்னுடன் தனிமையில் சீமான் சந்தித்து மன்னிப்பு கேட்ட பிரபல தொழிலதிபர் தூதாக அனுப்பி இருக்கிறார் என்றும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் கேளுங்கள் எனக் கூறினார்.
மேலும், சீமான் மன்னிப்பு கேட்டாலும் நான் அதை தற்போது ஏற்க மாட்டேன். அவர் மீது புதிதாக சிவில் வழக்கு தொடர உள்ளதாக கூறினார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.