திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான கங்காதேவி 9 ஆம் வகுப்பு தேர்ச்சியை முடித்து 10 ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இந்நிலையில் அதவத்தூர் பகுதி முள்காட்டை ஒட்டிய சுற்றுச்சுவர் அருகே சிறுமி கங்காதேவி உடல் எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. பின்னர் இச்சம்பவம் குறித்த விசாரணையில் சிறுமி கடைசியாக பேசிய அப்பகுதி டைல்ஸ் தொழிலாளி செந்தில் மற்றும் யோகலட்சுமி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். பங்காளி உறவுமுறையான செந்திலுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கங்காதேவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியிடம் சென்ற செந்தில், யாருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கங்காதேவியை கண்டித்துள்ளார். இதன்பின் முள்காட்டு பகுதிக்கு வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் நான் கங்காதேவியை அடித்தான் வேறு எந்த தவறும் செய்யவில்லை என கூறியுள்ளார். சிறுமியை செந்திலே எரித்து கொலை செய்தாரா? அல்லது சிறுமியே தீவைத்து தற்கொலை கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் போனில் பேசிய வினோத் என்பவரை பற்றிய தகவலையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விரைவில் சிறுமியின் கொலை சம்பந்தமான முழு தகவலும் வெளிவரும் என்று கூறப்படுகிறது.