திருச்சி ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் திருவிழா! பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு

0
310
#image_title

திருச்சி ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் திருவிழா! பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு

திருச்சி ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவையொட்டி 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து வழிபாடு

திருச்சி மாநகர், விமான நிலையத்திற்கு அருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 40ம் ஆண்டு திருவிழாவானது கடந்த 24ம் தேதியன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் கிராமங்கள் தோறும் வலம் வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது.

கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி ஆலயத்திலிருந்து 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி மற்றும் பால்குடம், காவடி எடுத்து வந்து நகர்புறப்பகுதிகளில் ஊர்வலமாக வலம் வந்தனர். பின்னர் ஆலயத்திற்கு வந்து அங்காள ஈஸ்வரிக்கு பால் அபிஷேகம் செய்து பக்திபரவசத்துடன் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர்:

ஒரு ஆலயத்தில் சிறப்புகளை தன் தாய் மொழியில் கூறுவதுதான் சிறப்பு .பர்மா நாட்டின் பீலிகான் என்ற பகுதியை சேர்ந்த தமிழர்களின், இங்குள்ள பர்மாவை சேர்ந்த தமிழர்களின் இஷ்ட தெய்வமாக காவல் தெய்வமாக வணக்க பட்டு வரும் பாரம்பரியமிக்க புனித ஸ்தலம்.

இங்குமுனீஸ்வரன் & அங்காள ஈஸ்வரி மூலவர்களாகவும் மதுரைவீரன், சங்கிலி கருப்பு, நாக கன்னி தெய்வங்களும் உள்ளனர். இந்த திரு கோவிலின் சிறப்பு என்னவென்றால் இந்த தெய்வங்களுக்கெல்லாம் பர்மா நாட்டின் ஆலயத்தின் காவலாளியாக இருந்த பூச்சி என்பவர் அந்த கோவிலின் காவல் தெய்வமாக சிலையாய் உருமாறியதாக புராணங்கள் உள்ளதாக நம்ப படுகிறது .

பூச்சி தாத்தா என்று இங்குள்ள மக்களால் வணக்க படும் பூச்சி ஐய்யா முன்னோடியான் என்கின்ற மனித தெய்வம் இங்குள்ள அணைத்து தெய்வங்களின் காவலாக கோவிலின் வாசலின் குடி கொண்டுள்ளார். இவருக்கென்று இந்த கோவிலில் ஒரு தனி வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. கையில் தடியுடன் காவலுக்கு நிற்கும் அவரை காணும் போதே உண்மையில் மெய் சிலிர்க்கிறது

Previous articleகுரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி
Next articleதமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி