3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

0
294
#image_title

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 43 இடங்களில் முன்னணியில் உள்ளது, காங்கிரஸ் கூட்டணி 1 இடத்திலும், என்.பி.எப் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

அடுத்ததாக மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 6, காங்கிரஸ் 6, என்.பி.எப் 23, மற்றவை 24 இடங்களில் முன்னிலையில் உள்ளன.  மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர், கம்யூனிஸ்ட் கூட்டணி 20, திப்ரா 11 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

 

Previous articleHollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!!
Next articleஇந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!!