Breaking News

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தைப் பற்றி தினமும் ஒரு புதிய செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சமந்தா நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய வேடத்தில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் குருவி படத்துக்கு பின்னர் 13 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இந்த படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். இதற்கு முன்பாக கில்லி, திருப்பாச்சி மற்றும் ஆதி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் வெளியானதில் இருந்து தயாரிப்பாளர்களின் கவனம் திரிஷா பக்கம் செல்ல, அவரின் கவனமோ சம்பளத்தின் பக்கம் சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஹிட் இல்லாமல் தவித்து வந்த அவர் லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த நிலையில் இந்த தகவலால் தயாரிப்பாளர்கள் அணுகும் போது சம்பளத்தை கோடிகளாக அதிகப்படுத்தியுள்ளாராம்.

Leave a Comment