விஜய்யுடன் த்ரிஷா லிஃப்ட்டில் தனியே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக வலைபேச்சு அந்தணன் பேசிய வீடியோவையும் இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலரும் பலவிதமாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இணையவாசிகள், விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ஹேஸ்டேக் ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு ரசிகை ஒருவரோ த்ரிஷாவிடம், நீங்களும் பெண்தானே. தயவு செய்து விஜய்யை விட்டுப் போய்விடுங்கள் எனக் கூறி கமெண்ட் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருப்பதாவது :-
இது தொடர்பாக நாம் மிகவும் உள்ளே போக முடியாது. ஆனால் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையில் சினிமாவைக் கடந்து ஏதோ ஒன்று உள்ளது என திரைத்துறை வட்டாரங்களில் ஒரு பேச்சு உள்ளது. அதனால்தான், மற்றவர்கள் ஒரு வாழ்த்து சொல்வதைவிடவும், த்ரிஷா எதாவது சமூகவலைதளத்தில் பதிவிடும்போது, அனைவரிடமும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.
திரைத்துறையில் நெருப்பு இல்லாமல் புகையாது. அப்படி புகைச்சலை ஏற்படுத்தி பல நேரங்களில் அது உண்மையாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இப்படியான தகவல்கள் வருவதை விஜய்யும் விரும்புகின்றார் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.
விஜய், நினைத்து இருந்தால், த்ரிஷாவிடம், பொதுவெளியில் வாழ்த்து போடவேண்டாம், தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து வாழ்த்தினாலே போதும் எனக்கூறி இருக்கலாம். ஆனால் பொது வெளியில் இந்த விஷயம் வெளியே வருவதை அவரும் விரும்புகின்றார்.அப்படியானால் மெல்ல மெல்ல இந்த சமூகத்திற்கு தங்களுக்குள் இருக்கும் உறவை சொல்ல நினைக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருப்பது திரைத்துறை மட்டம் இன்றி ரசிகர்கள் இடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.