பொதுவாக சினிமா துறையை பொருத்தவரையில் நடிகர்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியும். திருமணத்தினால் அவர்களுடைய கேரியர் எந்த விதத்திலும் பாதிப்படையாது. ஆனால் நடிகைகளுக்கு இவை நேர்மாறானது. திருமணம் நடந்து விட்டால் கேரியரில் பயணிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் தங்களுடைய 30 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு தான் காதலை தன்னுடைய 40 ஆவது வயதில் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை திரிஷா அவர்கள்.
நடிகை த்ரிஷா, திரைக்கு வந்த புதிதில் எந்த காதல் கிசுகிசுவிலும் சிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு சில நடிகர்களுடன் இவர் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நடிகர் ராணா டகுபதி. நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பிரேக்-அப் நிகழ்ந்ததால் இருவரும் இப்பாேதும் நண்பர்களாக மட்டும் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து, த்ரிஷாவிற்கு தொழிலதிபர் வருண் மணியனுடன் 2015ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக இந்த திருமணம் நிச்சயத்துடன் நின்று போனது.
தற்பொழுது instagram பதிவில் த்ரிஷா அவர்கள் காதல் குறித்து பதிவிட்டு இருப்பது :-
” வாழ்வில் ஒரு முறை மட்டும் வரும் உண்மை காதல் என்னவென்றால், ஒருவர் உங்களை உண்மையானவராக இருக்க விடுவதும், உங்களது புதிய பரிமாணங்களை ஏற்றுக்கொள்வதும்தான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த பதிவில் அவர் Evil Eye இமோஜியையும் சேர்த்திருக்கிறார். இது, பிறர் கண்படக்கூடாது என்பதற்காக உபயோகிக்கும் இமோஜி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, தன் காதல் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாத த்ரிஷா, சமீப காலமாக சந்தேகத்திற்குறிய பதிவுகளை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.