திரிஷா தான் கரெக்ட்டா இருப்பாங்க.. வேற யாரையும் சொல்ல முடியாது- நச்சுன்னு பதிலளித்த தவெக தலைவர்!!

TVK: விஜய் மற்றும் திர்ஷாவின் பழைய வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 69 ஆவது படமான ஜனநாயகத்தை இயக்குனர் ஹச் வினோத் எடுத்து வருகிறார். இது அவரின் கடைசி படம் என்பதால் மற்ற படங்களை காட்டிலும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கடந்த குடியரசு தின விழா அன்று, இப்படத்தின் தலைப்பை வெளியிட்டனர். அதேபோல அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே இவர் மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து பெறப் போவதாக தகவல்கள் உலா வந்தது.

அதற்கேற்றார் போல் விஜய்யும் கோட் படத்தில் திரிஷாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இருவரும் தனி விமானத்தில் சென்று வந்துள்ளனர். இவை அனைத்தும் இவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு ஏற்றார் போல பொருந்தியது. இவ்வாறு இருக்கையில் த்ரிஷா கட்சிக்குள் இணைந்தால் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சும் அடிபட்டது.

ஆனால் கிசு கிசு பேச்சுகளுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அதனை ஒதுக்கி வைத்துள்ளாராம். இவரது பழைய பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் தனியார் தொலைக்காட்சியில் காபி வித் அனு என்ற நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா கலந்து கொண்டுள்ளனர். இதில் விஜய்யுடன் யார் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். அதற்குரிய ஆப்ஷனில் விஜய் திரிஷா, விஜய் ஜோதிகா, விஜய் அசின் என இருந்துள்ளது.

ஆனால் விஜய் திரிஷாவுடன் இருந்த ஆப்ஷனை தான் தேர்வு செய்தார். மேலும் எங்களது ஜோடி நன்றாக உள்ளது என பலரும் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் திரிஷா பக்கத்தில் இருக்கும் போது வேறு யாரை சொல்ல முடியும் என்று கிண்டலடித்தும் பேசி உள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.