விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்! 

0
323

விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்!  

தளபதி 67 படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

வாரிசு படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் 67 வது படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணையும் வெற்றி கூட்டணி என்பதால் இந்த படத்திற்கு ஹாலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடிப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது. 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு முன்பு திரிஷா விஜய் உடன் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி,  உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்திருந்தார் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படக்குழுவினர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளனர். இதையடுத்து லியோ படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. அதற்கு ஏற்றார் போல் லியோ படத்தின் காட்சிகளை திரிஷா தனது சமூக வலைதள  பக்கமான இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி வட்டதாக செய்திகள் வெளிவந்தன.  படக்குழுவினருடன் ஏற்பட்ட ஆக்கபூர்வமான கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டதாக காரணம் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், லியோ படத்தின் படப்பிடிப்புக்காக திரிஷா காஷ்மீருக்கு சென்று உள்ளார். விஜய் மற்றும் திரிஷா போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரிஷா படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறுவது வருத்தமாக உள்ளது. அந்த செய்தியில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

 

Previous articleகாவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! 
Next articleபட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!