அனைவருக்கும் பிடித்த தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.முட்டைகோஸ் வைத்து அருமையான ஒரு ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்:-
1)முட்டைகோஸ்
2)சில்லி மசாலா
3)உப்பு
4)இஞ்சி,பூண்டு பேஸ்ட்
5)சோள மாவு
6)பெரிய வெங்காயம்
7)கேரட்
8)கொத்தமல்லி தழை
9)சோயா சாஸ்
10)மிளகாய் தூள்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு மீடியம் சைஸ் முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் இந்த முட்டைகோஸை போட்டுக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு இஞ்சி,பூண்டு பேஸ்டை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் 50 கிராம் சில்லி பொடி மற்றும் 20 கிராம் கார்ன் பிளார் பொடி கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு மசாலாவில் கலந்த முட்டைகோஸை அதில் தூவி பொரித்தெடுக்க வேண்டும்.
பிறகு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி சோள மாவு போட்டு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை ஊற்ற வேண்டும்.பிறகு முட்டைகோஸ் சில்லியை அதில் போட்டு ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் ஊற்றி கலந்துவிட வேண்டும்.
பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி நறுக்கிய பெரிய வெங்காயம்,துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி தழைகளை தூவி சாப்பிட்டால் தள்ளுவண்டி கடை காளான் சுவையில் இருக்கும்.