பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை!

பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை!

தற்போது உள்ள கால சூழலில் ஒரு வீட்டில் கூட கூட்டுக் குடும்பம் என்பதே கிடையாது. சிறு சிறு குடும்பங்கள் கணவன், மனைவி பிள்ளைகள் என்ற முறையில் மட்டுமே அதிக அளவில் வசிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடுகளும் மிகப் பலவாறு உள்ளன. முதலில் பெரியோர்கள் இருக்கிறார்கள் சண்டை போடக் கூடாது என்று ஒரு பக்கம் இருந்தார்கள். அவர்களுக்கு ஆத்திரம் இருந்தாலும் பெரியவர்களுக்காக அவர்களுக்குள் சண்டை வராமல் இருந்தது.

தற்போது அப்படி இல்லாத காரணத்தினால் அவர்கள் எதை செய்கிறார்கள் என்றும் தெரிய மாட்டேன் என்கிறது, எதற்காக சண்டையிடுகிறார்கள், முடிவு என்னவாகிறது என்றும் தெரிய மாட்டேன் என்கிறது. மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், பொறுமையாக நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கவும் கூட ஆள் இல்லாத நிலைதான் பல வீடுகளில் நடக்கின்றது. என்னதான் பெரியவர்கள் இருந்தால் ஒரு பக்கம் குறை கூறுவார்கள் என்று சொன்னாலும், பல விஷயங்களில் அவர்கள் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அனைவர் வீட்டிலும் வீட்டுக்கு வீடு வாசப்படி தான். தன்னிடம் சொல்லாமல் பானிபூரி வாங்கி வந்தார் என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கணவன் மனைவி உள்ளனர். கணவர் படித்து நல்ல நிலையில் வேலைக்கு சென்று வருகிறார். அவர் பெயர் ககினிநாட் சர்வதே. அவருக்கு 33 வயது அவருடைய மனைவி பிரதிக்க்ஷா சர்வதே அவருக்கு  23 வயது. இவர்களுக்கு கடந்த 2019 ம் வருடம் திருமணம் ஆனது.

இந்நிலையில் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது மனைவிக்காக பானிபூரி வாங்கலாம் என்று எண்ணி வாங்கிக் கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து அதன் பிறகு அதற்காக ஒரு சண்டை ஏற்பட்டு உள்ளது. அதில் என்னிடம் சொல்லாமல் எப்படி பானிபூரி வாங்கலாம் என மனைவி கண்டித்துள்ளார். மனைவிக்கு கணவன் என்ன செய்வது, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் போகவே சண்டை பெரிதாக முடிந்துள்ளது.

இருவரும் அதே வீட்டில் வெவ்வேறு இடங்களில் படுத்து தூங்கி விட்டனர். காலையில் எழுந்து  கணவன் பார்க்கும் போது மனைவி எழவே இல்லை. அதன்பிறகு மனைவியை தேடி பார்த்தால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் விஷம் அருந்தி அதன் காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை அவர் விஷம் அருந்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரை காப்பாற்ற முடியாமல் பலியாகிவிட்டார். அதன் காரணமாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Comment