கௌதம் மேனன் மற்றும் சிம்புவிற்கு இடையேயான பிரச்சனை!! தீர இதுதான் ஒரே வழி!!

Photo of author

By Gayathri

‘கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடுவது போன்ற திரைப்படம் சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் திறம்பட செய்பவர் STR’. 96களின் ஃபேவரட் படமான கோவில்,குத்து போன்ற படங்களில் நடிகராக பவனி வந்தவர். இவருக்கு காதல் தோல்விகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

அதைத்தொடர்ந்து அவர் நடிப்பதையும் நிறுத்தி ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வந்தார். அந்நேரத்தில் அவருக்கு உடல் எடையும் அதிகரித்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் ‘வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்’ என்ற படம் மூலம் மீண்டும் நடிகர் பயணத்தை தொடங்கினார். ஆனால்,அப்படம் சரியாக ஓடவில்லை. அதைத்தொடர்ந்து, பயங்கர முயற்சியோடு உடம்பை குறைத்தார். அதன் பின் “சுசிந்திரன் இயக்கத்தில், ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார்”. அதுவும் வரவேற்பு பெறாமல் போனது.

அவ்வருடத்திலேயே ‘எஸ்.ஜே.சூர்யா உடன் இருந்து மாநாடு படம் நடித்தார்’. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலும் வெற்றி கண்டார். இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய படமான ‘பத்து தல’ படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதற்கு அடுத்தபடியாக எஸ்டிஆர் 48 படமானது பல சர்ச்சைகளை தாண்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு தனது 49 ஆவது படமான ‘தக்லைஃப்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். ‘எஸ் டி ஆர் 48’ படம் மூலம் கொஞ்ச நாட்களாகவே பல சிக்கல்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கௌதம் மேனன், சிம்புவை படத்திற்காக அணுகும்போது நடிக்க மறுத்துவிட்டார்’.

ஏற்கனவே அவருக்கு ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் கௌதமுடன் மனஸ்தாபம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ரசிகர்களோ, கௌதம் உடன் இணைந்து படம் நடித்தால் நல்லா இருக்கும் என வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.