நாக சைதன்யா – சோபிதா திருமணத்தில் சிக்கல்!! பிரபல ஜோதிடர் வேணு சுவாமி கணிப்பு!!

Photo of author

By Gayathri

நாக சைதன்யா நடிகை சமந்தா அவர்களை காதலித்து திருமணம் செய்து இருவரும் சந்தோஷத்தோடு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இருவரும் பிரிந்த பின்பு நடிகை சமந்தா அவர்கள் சினிமா துறையில் தனக்கென புதிய பாதை ஒன்றை உருவாக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். நாக சைதன்யாவோ நடிகை சோபிதா அவர்களை திருமணம் செய்ய முடிவு செய்த நிச்சயதார்த்தம் வரை தற்பொழுது முடிந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று திருமணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரபல ஜோதிடர் வேணு சுவாமி அவர்கள் இவர்களுடைய திருமணத்தில் சிக்கல் இருப்பதாக கூறி இருப்பது நாக சைதன்யாவின் உடைய குடும்பத்தை மட்டும் இன்றி தெலுங்கு திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களுடைய திருமணம் குறித்து கணித்துக் கூறிய வேணு சுவாமி அவர்கள், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் 2027 ஆம் ஆண்டில் பரஸ்பரம் பெற்று இருவரும் பிரிய வேண்டிய நிலை வரும் என்று கூறியிருக்கிறார்.இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜோதிடருக்கு தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மேலும் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் இதுபோன்று யாரும் தலையிடக்கூடாது என்று வேணு சுவாமிக்கு கண்டனங்கள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து நாக சைதன்யா – சோபிதா குறித்த வீடியோவை வேணு சுவாமி நீக்கியிருந்தார். எனினும், இது தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கி பேசு பொருளாகியுள்ளது.