அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட சோதனை! டிரம்ப் வெளியிட்ட அதிரடி உத்தரவு

Photo of author

By Parthipan K

உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது அமெரிக்காவில் தான். இதனால் வெளிநாடுகளிலிருந்து சென்று அமெரிக்காவில் பணி புரியும் நபர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அடுத்த சோதனையாக அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் வெளிநாட்டினர் எச் 1 பி வீசா மூலம் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகின்றன.இதில் பெரும்பாலான மக்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் பணியாளர்களே இந்த எச் 1 பி விசாவை பெறுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனவின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் உயிர் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோருக்கு வேலை இல்லா திண்டாட்டம் நிலவியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவில் அதிகமான வெளிநாட்டவர்கள் எச் 1 பி விசா(H1B Visa) மூலம் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு சம்பளம் இல்லாமல் 2 மாதங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் பின்னர் தாய் நாடு சென்று விட வேண்டும் என்ற சட்டமும் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டவர்களுக்கு ஆன வேலை குறைக்கப்பட்டு அதற்கு பதில் உள்நாட்டவர்களையே வைத்து வேலை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.எனவே வேலை தொடர்பாக விசா நடப்பு ஆண்டு இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா.

இந்தியாவில் இருந்து எச் 1 பி விசா (H1B Visa) மூலம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளதால்,இனிமேல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.