அதிரப்பள்ளியில் மீண்டும் தும்பிக்கையில்லாத காட்டுயானை குட்டி!!

0
178
#image_title

அதிரப்பள்ளியில் மீண்டும் தும்பிக்கையில்லாத காட்டுயானை குட்டி!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள அதிரப்பள்ளி உள்ள ரப்பர் தோட்டத்தில் வந்த யானை கூட்டத்தில் குட்டியானை ஓன்று தும்பிக்கையில்லாமல் காணப்பட்டது.

இந்த குட்டியானையின் தும்பிக்கை எதாவது வனவிலங்கு தாக்குதலில் துண்டிக்கப்பட்டதா அல்லது வேறு எதாவது காரணத்தால் தும்பிக்கையை இழந்ததா என தெரியவில்லை.

தும்பிக்கையில்லாமல் யானைக்குட்டியால் நீண்ட காலம் உயிர் வாழ முடியுமா என கேள்வி எழுந்தது.

வனத்துறையினர் இந்த யானைகுட்டியை கண்காணிக்க முடிவு செய்த நிலையில் யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அந்த தும்பிக்கையில்லாத யானை குட்டி தற்பொழுது மீண்டும் அதிரப்பள்ளி ரப்பர் தோட்டத்திற்கு 8 யானைகள் உள்ள கூட்டத்துடன் தனது தாய் யானையுடம் மீண்டும் வந்துள்ளது.

குட்டியானை தும்பிக்கையில்லாத போதும் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது. தனது தாயின் அரவணைப்பில் குட்டியானை அதற்குரிய சுட்டிதனத்துடன் விளையாடி வருகிறது.

Previous articleகாதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Next articleகடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!