நம்புங்க இந்த எண்ணெயை தலைக்கு தடவினால்..இனி ஒரு முடி கூட கொட்டாது!!

Photo of author

By Divya

தற்பொழுது ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பிரச்சனை பொதுவான ஒன்றாக இருக்கிறது.கூந்தல் பராமரிப்பின்மை,மன அழுத்தம்,வேலைப்பளு,தூக்கமின்மை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் அதிகளவு முடி உதிர்கிறது.

தலைமுடி உதிர்வை அலட்சியப்படுத்தினால் விரைவில் வழுக்கை வந்துவிடும்.எனவே சருமத்தை பராமரிப்பது போன்றே தலைமுடியையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

1)பெரிய நெல்லிக்காய் – மூன்று
2)தேங்காய் எண்ணெய் – ஒரு கப்
3)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பெரிய நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அடுப்பில் இரும்பு வாணலி வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் அரைத்த பெரு நெல்லி சாறு சேர்த்து குறைவான தீயில் கொதிக்கவிடவும்.

இந்த எண்ணெயை இரண்டு நாட்களுக்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்துவந்தால் முடி உதிர்தல் நிற்கும்.

தேவையான பொருட்கள்:

1)தேங்காய் எண்ணெய் – ஒரு கப்
2)ஆலிவ் எண்ணெய் – 1/2 கப்
3)கறிவேப்பிலை – 1/4 கைப்பிடி
4)கற்றாழை துண்டுகள் – 10

செய்முறை:

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து இரண்டாக கேட் செய்து கொள்ளவும்.பிறகு அதில் இருக்கின்ற ஜெல்லை மட்டும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு 1/4 கைப்பிடி கருவேப்பிலையை ஈரமில்லாமல் நன்றாக உலரவிட்டு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் இரும்பு வாணலி வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து காய்ச்சவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.