அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்!
அரிசி இல்லாத வீடு கிடையாது. நாம் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக உணவு கருதப்படுகிறது. உணவு என்றாலே முதன்மைத்துவம் வாய்ந்தது அரிசி தான். ஒரு சிலர் ஒரு வருடத்திற்கு ஆன அரிசியை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
ஒரு சிலர் மாதந்தோறும் தேவையான அரிசியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். வகையில் எந்த தினத்தில் அரிசி வாங்கினால் நம் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை மற்றும் அரிசிக்கு பஞ்சம் இல்லை என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
பொதுவாக வீட்டில் எந்த ஒரு பொருட்கள் இல்லை என்றாலும் நாம் சமாளித்துக் கொள்ளலாம் ஆனால் அரிசி இல்லை எனில் அதனை கடந்து செல்லவே முடியாது. அரிசியை திங்கட்கிழமையில் வாங்கினால் நம் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
மாதம் ஒருமுறை திங்கட்கிழமை அன்று அரிசி வாங்க வேண்டும். அரிசியை மட்டும் கடன் சொல்லை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அரிசி என்பது அன்னலட்சுமி மறு உருவம் அதனால் அரிசியை நம் கையில் இருந்து லட்சுமி கொடுத்துதான் அன்னலட்சுமி பெற வேண்டும்.
இவ்வாறு மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமை என்றும் அரிசியை நாம் வாங்கலாம் அவ்வாறு செய்து வர நம்முடைய கடன் படிப்படியாக குறையும். அரிசி எப்பொழுதும் தரையில்தான் வைக்க வேண்டும். அரிசியை படிகொண்டு மட்டுமே அளக்க வேண்டும். அரிசியை அளக்க பயன்படுத்தப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அதில் எப்பொழுதும் அரிசி இருந்து கொண்டே இருக்க வேண்டும்.