தளர்ந்து தொங்கிப் போன மார்பகத்தை சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்!

Photo of author

By Divya

பெண்களுக்கு வயது அதிகமாகும் போது மார்பகங்கள் தளர்ந்து தொங்குவது இயல்பான ஒன்று.ஆனால் இன்று இளம் வயது பெண்களுக்கு தளர்ந்த மார்பங்ககள் பாதிப்பு இருக்கிறது.மார்பகத்தை பராமரிக்க தவறுதல்,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் விரைவில் மார்பகங்கள் தளர்ந்து விடுகிறது.

இவ்வாறு தளர்ந்து போன மார்பகங்களை சரி செய்ய வீட்டில் இருந்தபடி சில விஷயங்களை செய்ய வேண்டும்.அது உங்களுக்கு நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும்.பெண்கள் அனைவரும் எடுப்பான மார்பகங்களை விரும்புகின்றனர்.எடுப்பான மார்பகங்கள் உள்ளவர்கள் அதை தக்கவைத்து கொள்ள விரும்புகின்றனர்.ஆனால் மார்பக பராமரிப்பின்மையால் இளம் வயதிலேயே மார்பகங்கள் தொங்கிவிடுகிறது.

தளர்ந்த மார்பகங்களை சரி செய்வது எப்படி?

ஐஸ் க்யூப் வைத்து மார்பகங்களில் மசாஜ் செய்து வந்தால் தளர்ந்த மார்பக பிரச்சனை சரியாகும்.

ஆலிவ் ஆயில் தளர்ந்து தொங்கும் மார்பகங்களுக்கு தீர்வாக இருக்கின்றது.தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஆலிவ் ஆயிலை கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வந்தால் தளர்ந்த மார்பகங்கள் சரியாகும்.

வெள்ளரிக்காயின் சதை பற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் போட்டு பீட்டரில் அடித்து வெள்ளரிக்காய் பேஸ்ட்டில் கலக்கவும்.இதை மார்பக பகுதியில் அப்ளை செய்து வந்தால் தளர்ந்து தொங்கும் மார்பகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.