உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சி செய்யுங்கள்!! காட்டமாக பேசிய மோகன்ஜி!!

Photo of author

By Gayathri

உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சி செய்யுங்கள்!! காட்டமாக பேசிய மோகன்ஜி!!

Gayathri

Try this on your own caste girls!! Mohanji spoke boldly!!

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள “பேட் கேர்ள்” திரைப்படத்தின் ட்ரீஸ் ஆனது ஜனவரி 26 அன்று வெளியிடப்பட்டது. இந்த பேட் கேர்ள் டீசரை பார்த்த மோகன் ஜி அவர்கள், ” பிராமண பெண்களை ஏன் இவ்வாறு இழிவு படுத்துகிறீர்கள் என்றும் உங்கள் ஜாதி பெண்களை இந்த மாதிரியான படங்களில் இவ்வாறு காட்ட வேண்டியதுதானே ” என்றும் காட்டமாக பதிவிட்டிருப்பது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் உடைய டீசரில் பிராமண பெண் ஒருவர் தன்னுடைய டீனேஷ் பருவத்தில் ஆண்களுடன் பழக நினைப்பது , அவர்களுடன் டேட்டிங் செய்ய நினைப்பது மற்றும் ப்ளூ ஃபிலிம் பார்ப்பாயா என கேட்பது என்பது போன்று வரிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தில் டீன் ஏஜ் வயதில் உள்ள ஒரு பெண் இயல்பாக தன்னுடைய உள் மனதில் என்னவெல்லாம் நினைப்பார் என்பதை குறித்து இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த டீசரை பார்த்த மோகன் ஜி அவர்கள் தன்னுடைய எக்ஸ தள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது :-

இயக்குனர் மோகன் ஜி அவர்கள் பிராமண பெண்ணினுடைய தனிப்பட்ட வாழ்க்கையை இவ்வாறு சித்தரிப்பது என்பது பிராமண குலத்தை இழிவு படுத்துவது போன்ற செயலாக இருக்கிறது என தெரிவித்ததோடு , உங்க ஜாதி பெண்களிடம் இதனை முயற்சி செய்ய வேண்டியது தானே என்று கேட்டிருப்பது மக்களிடையே ஆதரவு மற்றும் எதிர்ப்பை பெற்று வருகிறது.