பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்!

0
176

பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்!

பெண்கள் அனைவரும் எப்பொழுதும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான். அவ்வாறு

வசிகரிக்கும் அழகு பெறபப்பாளி பழ சாறை முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

முகத்துக்கு நல்ல நிறம் கிடைப்பதற்கு பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். அதில் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.

மேலும் சருமம் இளமையுடன் காட்சியளிக்க மிக்ஸியில் சிறிது பப்பாளி அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

கை விரல்கள் மிருதுவாக இருப்பதற்கு பப்பாளி பழக் கூழை அன்னாசி பழச் சாறுடன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். அதனையடுத்து முட்டையின் மஞ்சள் கருவை வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன்சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள்.

இதனை பப்பாளி கூழுடன் கலந்து உங்கள் கை விரல்களை அதில் அரைமணி நேரம் ஊற விட வேண்டும். நகக்கண்களை மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் நகம் மற்றும் கை விரல்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மிளரும்.

முகம் பளிச்சி என்று எப்பொழுதும் இருப்பதற்கு பப்பாளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து அதனை முகத்தில் தேய்த்து ஊற வைத்து நீரில் கழுவினால் சருமத்தில் வெயிலின் தாக்கத்தினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி முகம் பளிச்சென்று காணப்படும்.

Previous articleதொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
Next articleபடித்த இளைஞர்களே ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்! வேலைக்கு போக ரெடியா?