கட்டுபாட்டுகளுடன் தரிசன தேதியை அறிவித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்

0
151

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து நான்காம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு,ஆந்திர மாநில அரசு கோவில்கள் திறப்பதற்கான அரசாணை ஒன்றை

இதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டது. இருந்தபோதிலும் நான்காம் கட்ட பொது முடக்கத்தில், கோவில்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை

ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்து உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிடம், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு இணங்கி திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்களை அனுமதி அளிக்கும் அரசாணையை, ஆந்திர அரசு கடந்த 2ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் கோவில்களில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் வரும் 8ம் தேதி முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவது ஆன்லைன் முன்பதிவு செய்வது, வாடகை அறைகள் வழங்குவது அவர்களின் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்வது, அன்னதானம் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் தேவஸ்தான ஆகம ஆலோசனை குழுவுடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனத்திற்க்கு அனுமதி வழங்கியுள்ளது தேவஸ்தானம். வரும் 11ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் 3,000 தரிசன டிக்கெட்டுகளும், திருப்பாதி கவுண்டர்களில் 3,000 டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என்றும் காலை 6.30 முதல் இரவு 7.30 வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர அரசு விதித்த நிபந்தனைகளின் படி திருமலையில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல், தரிசன வரிசைகள் தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல், முகக் கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous articleநடிகர் கமல்ஹாசன் திடீரென தொடங்கிய புதிய அமைப்பு
Next articleஒருவருக்கு 50 ஆயிரம் உதவி! வழங்காவிட்டால் வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்