தமிழ் சினிமாவில் புதிய நாயகனாக  அறிமுகமாகும் டிடிஎப் வாசன்!! ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோருக்கு பாதிப்பு!!

0
142
TTF Vasan to debut as a new hero in Tamil cinema!! Rajini Kamal Vijay Ajith affected!!
TTF Vasan to debut as a new hero in Tamil cinema!! Rajini Kamal Vijay Ajith affected!!

தமிழ் சினிமாவில் புதிய நாயகனாக  அறிமுகமாகும் டிடிஎப் வாசன்!! ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோருக்கு பாதிப்பு!!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் தமிழ் சினிமாவில் புதிய நடிகராக அதுவும் கதாநாயகனாக அறிமுகம் ஆகப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும் 2 கே கிட்ஸ் மத்தியில் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்தன் வாசன் என்ற டிடிஎப் வாசன் அவர்கள் Twin Throttlers என்ற யூடியூப் சேனல் மூலம் பைக் சாகசங்கள் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு தனக்கென்று தனி கூட்டத்தை சேர்த்தார்.இவரது திரில்லான பைக் சாகசங்கள் மூலம் 2கே கிட்ஸ் மத்தூயில் மிகவும் பிரபலமடைந்தவர்.டிடிஎப் வாசன் அவர்களுக்கு  தற்பொழுது வரை 38 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.

இந்த டிடிஎப் வாசன் அவர்கள் செல்லும் இடம் எல்லாம் சினிமா நடிகர் செல்வது போன்று ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. என்னதான் ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அவ்வபோது டிடிஎப் வாசன் அவர்கள் சர்சசையில் மாட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.டிடிஎப் வாசன் அவர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்தாக சமூகவலைதளங்களில் அவருக்கு கண்டணங்கள் எழுந்து வருகின்றது.

அவ்வப்போது இவர் மீது  சாலைகளில் அதி வேகமாக வண்டியை ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது, சாலையில் செல்லும் மற்ற பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்துவது போன்று பல குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் டிடிஎப் வாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் யூடியூபர் டிடிஎப் வாசன் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அவருடைய பிறந்தநாளான ஜூன் 29ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.