திமுக வந்தாலே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு 

Photo of author

By Anand

திமுக வந்தாலே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு 

Anand

TTV Dhinakaran

திமுக வந்தாலே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
https://twitter.com/TTVDhinakaran/status/1574336314907893760
அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/TTVDhinakaran/status/1574336316807880704