இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? – டிடிவி தினகரன் விமர்சனம் 

Photo of author

By Anand

இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? – டிடிவி தினகரன் விமர்சனம் 

Anand

TTV Dhinakaran

இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? – டிடிவி தினகரன் விமர்சனம்

சமீபத்தில் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய திமுக அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

தமிழக மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து திமுக அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.

இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் ‘சொல்லாததையும் செய்வதோ?” என்று அவர் கூறியுள்ளார்.