முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்?

0
174
ttv-dhinakaran-given-a-post-for-actor-ranjith-in-ammk-latest tamil news online today
ttv-dhinakaran-given-a-post-for-actor-ranjith-in-ammk-latest tamil news online today

முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்

கடந்த ஆண்டு பாமகவில் இணைந்த உடனேயே நடிகர் ரஞ்சித்துக்கு, அங்கு மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றியவர்களுக்கு கூட வழங்காத இந்த மாநில துணைத் தலைவர் பதவியை கட்சியில் இணைந்த உடனே பாமக நிறுவனர் ராமதாஸ் நடிகர் ரஞ்சித்துக்கு வழங்கினார்.ஆனால் அவரின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததைக் காரணம் காட்டி அக்கட்சியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அமமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாமகவில் இணைந்த உடனே மாநில பொறுப்பு வழங்கியது போல அமமுகவில் இவருக்கு எதாவது பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவருக்கு இறுதியாக ஏமாற்றமே மிஞ்சியது.இதற்கிடையே அமமுகவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலக நடிகர் ரஞ்சித் முடிவெடுத்ததாக தகவல் செய்திகளில் வெளியானதையடுத்து, அவ்வளவு நாட்களாக கண்டு கொள்ளாமல் இருந்த தினகரன் அவரின் உதவியாளர் மூலமாக ரஞ்சித்திடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார். இதனையடுத்து, நான் கட்சியிலிருந்து விலக மாட்டேன், எனது தலைவர் தினகரன் தான் என்று நடிகர் ரஞ்சித் தன்னுடைய பங்கிற்கு பேட்டியளித்தார். இதனையடுத்து அமமுக பேச்சாளர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர்களுக்கும் பயிற்சியளித்திருக்கிறார்.

இந்த நிலையில் அமமுக துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளை டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். அதன்படி, அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, அமைப்புச் செயலாளராக திருவான்மியூர் முருகனும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சியும், மாணவரணிச் செயலாளராக அண்ணா நகர் பரணீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் நடிகர் ரஞ்சித்தும்,ஈஸ்வரனும் பாமகவில் இணைந்து குறுகிய காலத்திலேயே நல்ல பதவியை வாங்கி கொண்டு அக்கட்சியின் மூலம் அரசியல் வெளிச்சத்தை அடைந்த பின்பு அதிமுகவுடன் கூட்டணி,ஊழலை ஒழிக்கும் கட்சியில் தான் இருப்பேன் என்ற காரணத்தை கூறிக் கொண்டு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை தலைமையாக கொண்ட அமுகவில் இணைந்துள்ளனர் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் முரணாக உள்ளது.கிடைப்பதை பெற்று கொண்டு இந்த கட்சிக்காவது உண்மையாக இருப்பார்களா என்று அமமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

Previous articleபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் இருக்கும் முழுமையான வீடியோ
Next articleதேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்