விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

Photo of author

By Sakthi

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

Sakthi

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை அதோடு தொகுதி பங்கீடு போன்றவற்றில் எல்லா அரசியல் கட்சியினரும் விறுவிறுப்பாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கின்றார். சென்னை அசோக் நகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரையில் விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

பெறப்பட்ட விருப்ப மனுக்களை எதிர்வரும் 10ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு விருப்ப மனுவை பெறுவதற்கான கட்டணமாக தமிழ்நாட்டில் பத்தாயிரம் ரூபாயும், புதுச்சேரி மாநிலத்தில் ரூபாய் 5000 கட்டணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி போட்டியிடுவதற்கு முதல் வேட்புமனுவை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கொடுத்திருக்கின்றார் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக பல இடங்களில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்திற்கு விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு நிர்வாகிகள் வருகை தந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.