இதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!

Photo of author

By Sakthi

இதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!

Sakthi

நோய்த்தொற்று காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இருக்கின்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி, சேலம், கோவை, மதுரை சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் தான் அவருடைய உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ரெம்டிசிவர் மருந்து வாங்குவதற்காக மேற்கூறிய ஐந்து தொகுதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதோடு இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில், இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது.

ரெம்டெசிவர் மருந்து விற்பனை ஆகும் மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க எல்லா மருத்துவமனைகளிலும் இந்த மருந்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்து வாங்குவதற்கு வருகை தருபவர்களுக்கு நோய்த்தொற்று வருவதற்கான சூழ்நிலை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே இதனை உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மூலமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு மருந்து தேவைப்படும் எல்லோருக்கும் எந்த விதமான சிரமமும் இல்லாமல் இந்த மருந்து கிடைப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும் எனவும், அதோடு இந்த மருந்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.